முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐகோர்ட்டு கண்டனம் எதிரொலி: ராகவேந்திரா மண்டப சொத்து வரியை செலுத்தினார் ரஜினிகாந்த்

வியாழக்கிழமை, 15 அக்டோபர் 2020      தமிழகம்
Image Unavailable

சென்னை ராகவேந்திரா மண்டபத்திற்கான சொத்துவரி ரூ.6.5 லட்சத்தை மாநகராட்சிக்கு நடிகர் ரஜினிகாந்த் செலுத்தினார்.

ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கான சொத்து வரி நோட்டீசை ரத்து செய்யக்கோரி ரஜினிகாந்த் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். நேற்று முன்தினம் இவ்வழக்கு விசாரணையின்போது, ரஜினிகாந்த் தரப்புக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்ததையடுத்து, ரஜினிகாந்த் தனது மனுவை திரும்ப பெறுவதாக அறிவித்தார். இதற்கான மனு தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. 

இது குறித்து சமூக வலைத்தளமான டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள ரஜினிகாந்த், 

ராகவேந்திரா மண்டப சொத்து வரி. நாம் மாநகராட்சியில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும்.  தவறைத் தவிர்த்திருக்கலாம். அனுபவமே_பாடம் என்று தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், ராகவேந்திரா மண்டபத்திற்கான சொத்துவரி ரூ.6.5 லட்சத்தை  மாநகராட்சிக்கு நடிகர் ரஜினிகாந்த் செலுத்தினார். 

சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரி செலுத்த நேற்றுடன் கெடு நிறைவடைந்த நிலையில் ராகவேந்திரா மண்டபத்திற்கான சொத்துவரி ரூ.6.5 லட்சத்தை மாநகராட்சிக்கு ரஜினிகாந்த் செலுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து