முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலாமின் 89-வது பிறந்த நாளில் அவரை வணங்கி போற்றுகிறேன்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி நெகிழ்ச்சி

வியாழக்கிழமை, 15 அக்டோபர் 2020      தமிழகம்
Image Unavailable

அப்துல் கலாமின் 89-வது பிறந்தநாளில் அவரை வணங்கி போற்றுகிறேன் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

மக்கள் ஜனாதிபதி, ஏவுகணை நாயகன், நாட்டின் தலைசிறந்த விஞ்ஞானி, மாணவர்களின் வழிகாட்டி என போற்றப்படும் டாக்டர் அப்துல் கலாமின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. கலாமின் 89-வது  பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் என அனைத்து தரப்பினரும் கலாமின் நினைவுகனை பகிர்ந்து அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.  

இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

கனவு காணுங்கள், கனவுகளிலிருந்து சிந்தனைகள் பிறக்கும், சிந்தனைகள் செயல்களாகும் என இளைஞர்களுக்கு என்றும் வழிகாட்டியாக திகழும் காலத்தால் அழியாத டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அய்யாவின் 89-வது பிறந்தநாளில் அவரை வணங்கி போற்றுகிறேன் என பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து