இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சென்று விளையாட முடிவு?

சனிக்கிழமை, 17 அக்டோபர் 2020      விளையாட்டு
England 2020 10 17

Source: provided

லண்டன் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியை அடுத்த ஆண்டு (2021) ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் பாகிஸ்தான் வந்து 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் விளையாடும்படி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்துள்ளது. 

இது குறித்து எல்லா அம்சங்களையும் பரிசீலனை செய்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்து இருக்கிறது.

அத்துடன் பாகிஸ்தானுக்கு மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டி திரும்புவதற்கு தங்களால் முடிந்த உதவியை செய்வோம் என்றும் கூறியுள்ளது. 2005-ம் ஆண்டுக்கு பிறகு இங்கிலாந்து கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் சென்று விளையாடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து