மார்தோமா திருச்சபை தலைவர் மரணம் பிரதமர் மோடி இரங்கல்

திங்கட்கிழமை, 19 அக்டோபர் 2020      இந்தியா
modi 2020 10 19

Source: provided

திருவனந்தபுரம் : கேரள மாநிலத்தில் கத்தோலிக்க, அப்போஸ்தல திருச்சபையின் அங்கமாக மார்தோமா திருச்சபை இயங்கி வருகிறது. இதன் 21-வது தலைவராக விளங்கியவர், ஜோசப் மார்தோமா (வயது 89).

இவர் கணைய புற்றுநோய் பாதித்த நிலையில், திருவல்லாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் மரணம் அடைந்தார்.

இவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதையொட்டி அவர் விடுத்துள்ள செய்தியில், “டாக்டர் ஜோசப் மார்தோமா மனித குலத்துக்கு சேவை செய்த குறிப்பிடத்தக்க ஆளுமை ஆவார்.

ஏழைகள் மற்றும் நலிவடைந்தோர் வாழ்க்கை முன்னேற்றத்துக்காக கடுமையாக உழைத்தவர். அவரது உன்னத லட்சியங்கள் எப்போதும் நினைவில் இருக்கும்” என கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து