எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வாஷிங்டன், அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்களை கைது செய்ய தனித்துறை (ஐஸ்) உருவாக்கப்பட்டுள்ள நிலையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 30 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து இந்தியா மீதான வன்மத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். ஏற்கனவே அமெரிக்காவில் இந்தாண்டு தொடங்கி இதுவரை சட்டவிரோதமாக தங்கியிருந்த 350 இந்தியர்களை கைது செய்து நாடு கடத்தினார்.
அமெரிக்காவில் இறக்குமதியாகும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்தார். மேலும் இந்தியர்கள் அதிகம் பெறும் எச்-1பி விசா விலையை ரூ.90 லட்சமாக உயர்த்தி அறிவித்தார். இதனால் இந்தியர்களின் அமெரிக்க கனவு ஏறக்குறைய எட்டாக்கனியானது. அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்களை கைது செய்து நாடு கடத்தி வருவதற்காக தனித்துறை (ஐஸ்) உருவாக்கப்பட்டுள்ளது.
அதன்படி கலிபோர்னியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 49 பேரை ஐஸ் அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களில் 30 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. சட்டவிரோமாக அமெரிக்காவுக்குள் குடியேறி சரக்கு வாகனங்கள் மற்றும் டாக்சிகளை அந்த நாட்டின் ஒட்டுனர் உரிமம் பெற்று அவர்கள் இயக்கி வந்தது தெரிந்தது. அவர்களை சிறையில் அடைத்து அமெரிக்க போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


