Idhayam Matrimony

ஓ.பி.எஸ்.சும், தினகரனும் தே.ஜ. கூட்டணியில் இல்லை: நயினார் நாகேந்திரன் பேட்டி

வியாழக்கிழமை, 25 டிசம்பர் 2025      தமிழகம்
Narnar 2025-09-21

கிருஷ்ணகிரி, ஓ.பன்னீர்செல்வமும், தினகரனும் எங்கள் கூட்டணி யில் இல்லை என்று  நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;-

தி.மு.க. - த.வெ.க. இடையேதான் போட்டி விஜய் சொல்லி வருகிறார். இந்தியாவையே  பிடித்துவிடுவேனு கூட விஜய் சொல்லலாம்.. ஆனால், இது சினிமா அல்ல. தேர்தல் தேதி அறிவிக்க வேண்டும், வேட்பாளர்கள் அறிவிக்க வேண்டும், வேட்பாளர்கள் விலைபோகாமல் இருக்க வேண்டும். மொத்தமுள்ள 234 தொகுதிகளில் இருந்து 10 வேட்பாளர்களின் பெயர்களை விஜய்யால் சொல்ல முடியுமா? கட்சிக்கு வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் இருக்க வேண்டும். த.வெ.க.வில் கட்டமைப்பே கிடையாது. குறையாக சொல்லவில்லை. 

ஓ.பன்னீர்செல்வமும், தினகரனும் எங்கள் கூட்டணியில் தற்போதைக்கு இல்லை. அதி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக வெளிவரும் தகவலில் உண்மை இல்லை. 2026 தேர்தலில் தி.மு.க.வுக்கு மாற்று அரசாக தேசிய ஜனயாயக கூட்டணி ஆட்சி அமைய வேண்டும். இந்த கருத்துள்ள எல்லோரும் ஒன்றாக இணைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 7 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 7 hours ago
View all comments

வாசகர் கருத்து