எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை, மும்பை மாநகராட்சி தேர்தலில் கூட்டணி குறித்து உத்தவ் தாக்கரே, ராஜ்தாக்கரே புதிய அறிவிப்பை அறிவித்துள்ளனர்.
மராட்டியத்தில் கடந்த ஆண்டு நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கு பிறகு பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதில் குறிப்பாக 20 ஆண்டுகள் பகையை மறந்து உத்தவ் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கைகோர்த்த சம்பவம் ஆகும். சிவசேனா நிறுவனர் பால்தாக்கரேயின் மகன் உத்தவ் தாக்கரே. பால்தாக்கரேயின் அண்ணன் மகன் ராஜ்தாக்கரே. சிவசேனாவில் உத்தவ் தாக்கரேக்கு பால்தாக்கரே முக்கியத்துவம் கொடுக்க தொடங்கியதால், கடந்த 2005-ம் ஆண்டு சிவசேனாவில் இருந்து ராஜ்தாக்கரே விலகினார். அது முதல் உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ்தாக்கரே இருவரும் அரசியலில் பகைவர்களாக மாறினர்.
ஆனால் திடீர் திருப்பமாக அவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன் அரசியலில் கைகோர்த்தனர். இந்த நிலையில் அடுத்த மாதம் (ஜனவரி) 15-ந் தேதி நடைபெற உள்ள மும்பை மாநகராட்சி தேர்தலில் கூட்டணி வைத்து போட்டியிட இருப்பதாக அந்த இரு கட்சிகளின் தலைவர்களும் நேற்று முன்தினம் கூட்டாக தெரிவித்தனர். இது தொடர்பாக அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


