முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உரிய பயிற்சி மற்றும் ஆலோசனைகளை பெறவே லண்டனுக்கு சென்ற பி.வி.சிந்து விளக்கம்

புதன்கிழமை, 21 அக்டோபர் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

லண்டன் : இந்திய முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையும், உலக சாம்பியனுமான பி.வி.சிந்து சில தினங்களுக்கு முன்பு லண்டன் புறப்பட்டு சென்றார்.

குடும்பத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கோபத்தில் அவர் லண்டன் சென்றதாகவும், ஐதராபாத்தில் உள்ள கோபிசந்த் அகாடமியில் அளிக்கப்படும் பயிற்சி திருப்தி அளிக்காததால், ஒலிம்பிக் போட்டிக்கான தேசிய பயிற்சி முகாமில் இருந்து பாதியில் விலகி விட்டதாகவும், குறைந்தது 2 மாதங்கள் கழித்து தான் தாயகம் திரும்புவேன் என்று அவர் கூறியிருப்பதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகின.

வெளிநாட்டு பயணத்தின் போது தனது தந்தை பி.வி.ரமணா அல்லது தாயார் விஜயா ஆகியோரில் ஒருவரை அழைத்து செல்வதை வாடிக்கையாக கொண்ட சிந்து இந்த முறை தனியாக சென்றிருப்பதற்கு இது போன்ற விவகாரங்களே காரணம் என்றும் அந்த தகவல்கள் தெரிவித்தன.

இந்த நிலையில் 25 வயதான பி.வி.சிந்து தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:- 

ஊட்டச்சத்து எடுத்துக் கொள்வதிலும், உடல்தகுதியை மேம்படுத்துவதிலும் உரிய பயிற்சி மற்றும் ஆலோசனைகளை பெறுவதற்காக சில தினங்களுக்கு முன்பு லண்டன் வந்தேன். அதுவும் எனது பெற்றோர் சம்மதத்துடன் தான் இங்கு வந்துள்ளேன்.

எங்கள் குடும்பத்தில் எந்த விரிசலோ, பிரச்சினையோ இல்லை. எனக்காக தங்களது வாழ்க்கையை தியாகம் செய்த எனது பெற்றோருடன் எனக்கு ஏன் பிரச்சினை வரப்போகிறது? நாங்கள் மிகவும் ஒற்றுமையாக இருக்கக்கூடிய குடும்பம். அவர்கள் எப்போதும் எனக்கு ஆதரவாக இருப்பார்கள். தினமும் எனது குடும்பத்தினருடன் உரையாடுகிறேன்.

இதே போல் எனது பயிற்சியாளர் கோபிசந்துடனோ அல்லது அவரது அகாடமியில் உள்ள வசதி வாய்ப்புகளை பயன்படுத்துவதிலோ எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இது தொடர்பாக வெளிவந்த தகவல்கள் அனைத்தும் முற்றிலும் தவறானது. இவ்வாறு சிந்து கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து