முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் முதல் முறையாக வழக்கு விசாரணையை நேரலையில் ஒளிபரப்பிய குஜராத் ஐகோர்ட்

திங்கட்கிழமை, 26 அக்டோபர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

காந்திநகர் : கொரோனா அச்சறுத்தல் காரணமாக பல்வேறு சேவைகள் முடங்கிய நிலையில் தற்போது நாடு முழுவதும் படிப்படியாக கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன.

அந்த வகையில் கொரோனா அச்சுறுத்தலால் தற்போது பல்வேறு நிறுவனங்களின் முக்கியக் கூட்டங்கள், மாணவர்களுக்கு வகுப்புகள் என முழுவதும் ஆன்லைன் மூலமாகவே நடைபெறுகின்றன.

அதேபோன்று தற்போது பல மாநிலங்களில் பாதிப்பு குறைந்தாலும் கொ ரோனா அச்சம் காரணமாக நீதிமன்றங்களில் பெரும்பாலும் காணொலி  காட்சி மூலமாகவே விசாரணை நடைபெற்று வருகிறது. இதையடுத்து இதன் அடுத்தகட்டமாக குஜராத்தில் முதல்முறையாக நீதிமன்ற வழக்கின் விசாரணை நேரலை செய்யப்பட்டுள்ளது.

இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக வழக்கு நேரலை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. குஜராத் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு பல்வேறு வழக்குகளை ஜூம் செயலி மூலமாக விசாரித்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து