முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

7.5 சதவீத இட ஒதுக்கீடு பற்றி ஏன் அப்போதே அறிக்கை விடவில்லை? தமிழக மக்களுக்கு ஸ்டாலின்: என்றுமே பகையாளிதான்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு

செவ்வாய்க்கிழமை, 27 அக்டோபர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை : மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு சட்ட மசோதா தமிழகத்தை தவிர எந்த மாநிலத்திலும் நிறைவேற்றவில்லை. ஆனால் இந்த சட்ட மசோதா விஷயத்தில் அனைத்தும் முடியும் தருவாயில் பிள்ளை பெற்றது அ.தி.மு.க. அந்த பிள்ளைக்கு பெயர் வைக்க முயற்சிக்கிறார் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின். சமுதாய சேவை செய்ய நினைக்கும் இளைஞர்களுக்கும் சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கும் அ.தி.மு.க. நல்ல களம் அமைத்து கொடுக்கும் எனவும்  ஜெயலலிதா காலத்தில் இருந்து சட்டமன்ற உறுப்பினர்களில் 60 சதவிகிதம் இளைஞர்களை சட்டமன்றத்திற்கு அனுப்பிய கட்சி அ.தி.மு.க. எனவும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் பேசினார். 

மதுரை மாநகர், மாவட்ட ஜெயலலிதா பேரவை மற்றும் மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எஸ்.எஸ் சரவணன் சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அம்மா கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகள் தொடர்ச்சியாக 3 நாட்கள் நடைபெற்றது. 

மதுரை சவுராஷ்டிரா ஆண்கள் மேல்நிலை பள்ளி மைதானத்தில் நடைபெற்ற அம்மா கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகளின் பரிசளிப்பு நிகழ்ச்சியில் தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், எம்.எல்.ஏ. க்கள் எஸ்.எஸ்.சரவணன், மாணிக்கம் உள்ளிட்டோர் பங்கேற்று முதல் மூன்று இடம் பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பைகள் மற்றும் 3 லட்சத்துக்கும் மேலான ரொக்க பரிசுகளை வழங்கினார்கள். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், 

ஜெயலலிதா காலத்தில் இருந்து சட்டமன்ற உறுப்பினர்களில் 60 சதவீத இளைஞர்களை சட்டமன்றத்திற்கு அனுப்பிய கட்சி அ.தி.மு.க. தற்போதுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் படித்தவர்கள். பண்புள்ளவர்கள். நான் ஒரு வழக்கறிஞர்.  இது போன்ற படித்தவர்களை தான் ஜெயலலிதா சட்டமன்ற உறுப்பினர்களாக ஆக்கினார். 

சமுதாய சேவை செய்ய நினைக்கும் இளைஞர்களுக்கும் சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கும் அ.தி.மு.க. நல்ல களம் அமைத்து கொடுக்கும்.  ஏழை வீட்டில் பிறந்து அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வு எழுதி மருத்துவ படிப்பில் சேர விரும்பும் சாமானிய, ஏழை மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு என்பதற்கான சட்ட மசோதாவை இந்தியாவில் தமிழகத்தை தவிர எந்த மாநிலத்திலும் நிறைவேற்றவில்லை.

7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு குறித்த நிறைவேற்றிய ஒரே மாநிலம் இந்தியாவிலேயே தமிழகம் மட்டும் தான்.  எந்த மாநிலத்திலும் இது போன்ற சட்ட மசோதா நிறைவேற்றப்பட வில்லை. 

ஆனால் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு விஷயத்தில் பிள்ளை பெற்றது அ.தி.மு.க. ஆனால் பெயர் வைக்க முயற்சி செய்பவர் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின். போராடுவதற்கு களம் வேண்டும் என்பதற்காக இந்த விஷயத்தை கையில் எடுத்துள்ளார் ஸ்டாலின். 

ஜெயலலிதா காலத்தில் பிற்படுத்தபட்ட மக்களுக்காக மண்டல் கமிஷன் 50 சதவிகித இடஒதுக்கீட்டு பரிந்துரையை அறிவித்தது. ஆனால் ஜெயலலிதா 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி ஏழைகள்,பிற்படுத்த பட்ட,சிறுபான்மையினர்கள் வாழ்வில் ஒளி ஏற்றி வைத்தார்.  அதன் தொடர்ச்சி தான் மருத்துவ படிப்பில் அரசு பள்ளியில் படித்த ஏழை மாணவர்களுக்கு 7.5 சதவிகித ஒதுக்கீடு ,  7.5 சதவிகித இடஒதுக்கீடு விஷயம் நல்லபடியாக முடிந்து விடுமோ என்ற பயத்தில் தான் ஸ்டாலின் போராட்ட நாடகம் ஆடுகிறார். 

ஏழை மாணவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என ஸ்டாலின் நினைத்து இருந்தால் சட்டசபையில் இது குறித்து பேசி இருக்கலாமே. தினமும் வெத்து, வேடிக்கையாக, முகம் சுளிக்கும் வகையில் 100 அறிக்கைகள் வெளியிடும் ஸ்டாலின் ஏன் 7.5 சதவிகித உள் இட ஒதுக்கீடு குறித்து அப்போதே அறிக்கை விடவில்லை? ஏன் சிந்திக்கவில்லை? ஸ்டாலினுக்கு சிந்தனை செய்யும் திறன் இருக்கிறதா இல்லையா என நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம். 

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு சட்ட மசோதா ஆளுநரின் முடிவு தெரிந்து மகுடம் சூட உள்ள இந்த நேரத்தில் மகுடம் சூட்டுவதில் பங்கு கேட்கும் ஸ்டாலின் தமிழக மக்களுக்கு பங்காளியா பகையாளியா என தெரியவில்லை.  ஆனால் தமிழக மக்களுக்கு என்றுமே பங்காளி எடப்பாடி பழனிசாமிதான். ஸ்டாலின் பகையாளி தான் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து