அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் டிரம்பின் பிரசார இணையதளம் முடக்கம்

வியாழக்கிழமை, 29 அக்டோபர் 2020      உலகம்
trump website 2020 10 29

அமெரிக்காவில் வருகிற 3-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ள நிலையில் டிரம்பின் பிரசார இணையதளத்தை ஹேக்கர்கள் முடக்கினர் 

அமெரிக்காவில் வருகிற 3-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிட அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் களமிறக்கப்பட்டு உள்ளார். தேர்தலுக்கு இன்னமும் சில நாட்களே இருக்கும் நிலையில் ஜனாதிபதி வேட்பாளர் இருவரும் ஒவ்வொரு மாகாணமாக சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர டிரம்பின் பிரச்சார குழு தனி இணையதளம் வாயிலாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறது.

இந்தநிலையில் டிரம்பின் பிரச்சார இணையதளத்தை ஹேக்கர்கள் முடக்கினர். சுமார் 30 நிமிடத்துக்கும் மேலாக அந்த இணையதளத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஹேக்கர்கள் அதில் டிரம்புக்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டனர்.

தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் டிரம்பின் பிரசார இணையதளம் முடக்கப்பட்டது அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து