முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா மருந்தை வினியோகிக்க முழு வீச்சில் தயாராகி வருகிறோம்: புனே மாவட்ட நிர்வாகம் தகவல்

சனிக்கிழமை, 7 நவம்பர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

மும்பை : கொரோனா தடுப்பு மருந்தை வினியோகிக்க முழு வீச்சில் தயாராகி வருவதாக புனே மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உலகில் பல்வேறு நாடுகள் கொரோனா தடுப்பு மருந்தை தயாரிக்கும் பணியில் இறுதி கட்டத்தில் உள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பு மருந்து கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கொரோனா தடுப்பு மருந்து சந்தைக்கு வந்தவுடன் அதை பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய புனே மாவட்ட நிர்வாகம் முழு வீச்சில் தயாராகி வருகிறது.  

கொரோனா தடுப்பு மருந்தை, கொரோனா தடுப்பு மருந்து நிர்வாக தேசிய வல்லுனர் குழுவுடன் இணைந்து மாவட்ட நிர்வாகம் வழங்க உள்ளது.  இது குறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்,

சுகாதாரப்பணியாளர்கள், நர்ஸ், டாக்டர்கள், லேப் டெக்னீசியன்ஸ், வார்டு பாய்ஸ், நிர்வாக ஊழியர்கள், ஆம்புலன்ஸ் ஊழியர்கள், டிரைவர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், ஆஸ்பத்திரி காவலர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கு தடுப்பு மருந்து கிடைக்க முன் உரிமை வழங்கப்படும் என்றார். 

இது குறித்து மாவட்ட கலெக்டர் ராஜேஷ் தேஷ்முக் கூறியதாவது:-

புனே மாவட்டத்தில் சுமார் 1.10 லட்சம் முன்கள பணியாளர்கள் உள்ளனர். அவர்களின் விவரங்களை சேகரித்து வருகிறோம். இதுகுறித்த தகவல்கள் கொரோனா தடுப்பு மருந்து பயனாளர்கள் மேலாண்மை தளத்தில் பதிவேற்றப்படும்.

மருந்துக்கடைகாரர்கள், பிசியோதெரபிஸ்ட், ரேடியோகிராபர்ஸ், அறிவியல் அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பு மருந்து வழங்க முன்னுரிமை வழங்கப்படும்.  இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து