முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒலிம்பிக்கில் 20 ஓவர் கிரிக்கெட்டை சேர்க்கலாம்: ராகுல் டிராவிட் ஆதரவு

ஞாயிற்றுக்கிழமை, 15 நவம்பர் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை : உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழா ஒலிம்பிக் போட்டியாகும். 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்தப்போட்டியில் கிரிக்கெட்டையும் சேர்க்க வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) இது தொடர்பாக ஒலிம்பிக் குழு அமைப்பினருடன் ஏற்கனவே ஆலோசனை நடத்தி இருந்தது.

ஐ.சி.சி. கடந்த 2018-ம் ஆண்டு நடத்திய சர்வேயில் 87 சதவீத ரசிகர்கள் ஒலிம்பிக்கில் 20 ஓவர் போட்டியை சேர்க்க ஆதரவு தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் ஒலிம்பிக்கில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை சேர்க்கலாம் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குனருமான ராகுல் டிராவிட் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

கிரிக்கெட் பல்வேறு நாடுகளில் விளையாடப்பட்டு வருகிறது. கிரிக்கெட்டில் 20 ஓவர் போட்டி சிறந்ததாகும். 75-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த போட்டியில் ஆடுகின்றன. இதனால் 20 ஓவர் போட்டியை ஒலிம்பிக் விளையாட்டில் சேர்க்கலாம்.

ஐ.பி.எல். போட்டி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. எனவே ஒலிம்பிக்கில் 20 ஓவர் அறிமுகம் செய்யப்பட்டால் மிகவும் பிரபலம் அடையும். கிரிக்கெட்டுக்கு இது நல்லது.

மைதான வசதிகள் சரியாக அமைந்து விட்டால் வெற்றிகரமாகிவிடும். இதனால் ஏதாவது ஒரு வகையில் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெற வேண்டும். இதற்கு சிறிது காலம் தேவைப்படலாம். ஆனால் இடம்பெறாமல் இருக்க கூடாது. இவ்வாறு ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து