காஷ்மீர் விவகாரம் காங்கிரஸ் மீது யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு

வியாழக்கிழமை, 19 நவம்பர் 2020      இந்தியா
Yogi 2020 11 01

Source: provided

லக்னோ : ஜம்மு மற்றும் காஷ்மீரில் வருகிற 28-ந் தேதி முதல் டிசம்பர் 19-ந் தேதி வரை மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை வருகிற டிசம்பர் 22-ந் தேதி நடைபெறும். 

தேர்தலில் போட்டியிடும் கட்சிகளில் ஒன்றான காங்கிரஸ் கட்சியின் தலைவர் குலாம் அகமது மிர் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது காஷ்மீரில் வலுகட்டாயத்துடன் சட்டங்களை அமல்படுத்தி வருபவர்களை தோற்கடிக்க முயற்சிப்போம் என்று கூறினார். 

எனினும் குப்கார் கூட்டணியில் நாங்கள் இல்லை என காங்கிரஸ் கட்சி கூறி வந்தது. ஆனால் குலாம் கூறியது பற்றி காஷ்மீர் உள்ளாட்சி தேர்தலுக்கான பா.ஜ.க. பொறுப்பாளர் அனுராக் தாக்குர் சமீபத்தில் குறிப்பிட்டு பேசும்பொழுது, பரூக் அப்துல்லா உமர் அப்துல்லா மற்றும் மெஹ்பூபா முக்தி ஆகியோரின் பார்வைகளுடன் காங்கிரஸ் கட்சி ஒத்து போகிறதா? அல்லது தொடர் தேர்தல் தோல்வியால் அவர்களுடன் தேர்தல் கூட்டணி ஏற்படுத்தி கொள்ளும் எதிர்பார்ப்புடன் உள்ளதா? என்பது பற்றி காங்கிரஸ் கட்சி தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என செய்தியாளர்களிடம் பேசும்பொழுது கூறினார். 

இந்நிலையில் குப்கார் கூட்டங்களில் காங்கிரஸ் கலந்து கொண்டது அக்கட்சியின் இரட்டை நிலைப்பாட்டை குறிக்கிறது என உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டாக கூறியுள்ளார். 

இதுபற்றி அவர் கூறும்பொழுது காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் இரட்டை நிலைப்பாடு வெளிப்பட்டு உள்ளது. பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதம் ஆகியவற்றுடன் தொடர்புடையவர்களை ஊக்குவித்து தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுடன் விளையாடி வருகிறது. 

 

ஒரே நாடு சிறந்த நாடு என்ற கொள்கையை வளர விடாமல் செய்ததற்கு காங்கிரஸ் பொறுப்பு என்பது உண்மையாகி விட்டது. 370-வது பிரிவு பற்றி காங்கிரஸ் கட்சி தெளிவுப்படுத்த வேண்டும் என நாடு விரும்புகிறது. என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து