ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நாட்டின் தேவை : பிரதமர் மோடி

வியாழக்கிழமை, 26 நவம்பர் 2020      இந்தியா
modi-2020-11-26

நவம்பர் 26, 2008 அன்று, பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவால் (எல்.இ.டி) பயிற்சியளிக்கப்பட்ட பத்து பயங்கரவாதிகள் மும்பையில் தாஜ் ஒட்டல், ஓபராய் ஒட்டல், லியோபோல்ட் கஃபே,நாரிமன் (சபாத்) மாளிகை, மற்றும் சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் ரெயில் நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் தொடர் தாக்குதல்களை நடத்தினர். இதில் வெளி நாட்டவர்கள் உள்பட 166 பேர் பலியானார்கள். 300க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். 

பாதுகாப்பு படை பயங்கரவாதிகள் 9 பேரைசுட்டுக் கொன்றது. இதில் பிடிபட்ட அஜ்மல் கசாப் 2012 நவம்பர் 21 ஆம் நாள் தூக்கிலிடப்பட்டான். இந்நிலையில், மும்பை தாக்குதலின் 12-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

இதனையொட்டி போலீஸ் அதிகாரிகள் மத்தியில் காணொலி காட்சி வாயிலாகப் பேசிய பிரதமர் மோடி 

அரசியலமைப்பு தினத்தைக் குறிப்பிட்டு மகாத்மா காந்தியின் உத்வேகம் மற்றும் சர்தார் வல்லபாய் படேலின் அர்ப்பணிப்புக்கு தலைவணங்க வேண்டிய நாள் இது என்றார். 

இதுபோன்ற பல ஆளுமைகள் இந்தியாவின் வளர்ச்சியின் பாதையை முடிவு செய்துள்ளன. அவர்களின் முயற்சிகளை நினைவில் கொள்வதற்காக அந்த நாளை அரசியலமைப்பு தினமாக கொண்டாட ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நவம்பர் 26 அன்று முடிவு செய்யப்பட்டது என கூறினார். 

மேலும் அவர் கூறும் போது கடந்த 2008-ல் இதே நாளில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் மும்பையில் தாக்குதல் நடத்தினர். வெளிநாட்டவர், நம் நாட்டு மக்கள், அதிகாரிகள், காவலர்கள் எனப் பலரும் உயிர் துறந்தனர். மும்பை தாக்குதல் ஏற்படுத்திய காயத்தை இந்தியா ஒருநாளும் மறக்காது. அந்தத் தாக்குதலின் விளைவு, இந்தியா இன்று புதிய கொள்கைகளை வகுத்து பயங்கரவாதத்தைத் திறம்பட எதிர்கொள்கிறது. இன்றளவும் நாட்டில் மீண்டும் மும்பை தாக்குதல் போன்ற சம்பவம் நடக்காமல் பாதுகாத்து வரும் வீரர்களுக்கு நான் தலைவணங்குகிறேன் என கூறினார். 

அண்மையில் முடிவடைந்த பீகார் தேர்தல்களைப் பற்றி பிரதமர் குறிப்பிட்டார், மேலும் கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் இந்தியாவின் வலுவான தேர்தல் செயல்முறைகளை உலகம் கண்டது. அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்ட வலிமை இதுபோன்ற கடினமான பணிகளை எளிதாக்க உதவுகிறது என்று கூறினார். 

ஒரு நாடு, ஒரு தேர்தல் என்பது விவாதத்திற்குரிய விஷயமல்ல, இது இந்தியாவின் தேவை என கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து