ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தி ஏ.டி.கே. மோகன் பகான் 2-வது வெற்றி

சனிக்கிழமை, 28 நவம்பர் 2020      விளையாட்டு
Mohan-Bagan 2020-11-28

Source: provided

கோவா : 2–0 கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தி ஏடிகே மோகன் பகான் அணி 7வது ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டியில் தனது 2வது வெற்றியை பதிவு செய்தது.

7வது ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் 8-ஆவது லீக் ஆட்டம் திலக் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதல் லீக் ஆட்டத்தில் கோராளா அணியை 1–0 என்ற கோல் கணக்கில் முதல் வெற்றி பெற்ற ஏ.டி.கே. மோகன் பகான் அணியும், ஈஸ்ட் பெங்கால் அணியும் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கடுமையாக போராடியும் கோல் அடிக்க வில்லை. 2-வது பாதி ஆட்டத்தின் போது 49-வது நிமிடத்தில் ஏடிகே மோகன் பகான் அணியின் சிறந்த வீரரான ராய் கிருஷ்ணா முதல் கோல் அடித்தார். இதனால் அந்த அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

இதைத் தொடர்ந்து ஈஸ்ட் பெங்கால் அணி வீரர்கள் கோல் அடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கினர். ஆனால் அவர்களின் முயற்சி பலன் அளிக்காத வகையில் ஏ.டி.கே. மோகன் பகான் அணி வீரர் தடுப்பு ஆட்டத்தை சிறப்பாக வெளிப்படுத்தினர்.

மேலும் அடுத்த கோல் அடிக்கும் முயற்சியிலும் ஏ.டி.கே. மோகன் பாகன் அணியினர் இறங்கினர். 85-வது நிமிடத்தில் பிரபிர் கொடுத்த பாஸில் மன்வீா் கோலாக மாற்றினார்.

ஆட்டத்தின் முடிவில் ஏ.டி.கே. மோகன் பகான் அணி 2 - 0 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தியது. இதன் மூலம் 7-வது ஐ.எஸ்.எல். காலந்பந்து போட்டியின் லீக் ஆட்டத்தில் ஏ.டி.கே. மோகன் பகான் அணி தனது 2-வது வெற்றியை பதிவு செய்ததது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து