Idhayam Matrimony

பேட்டிங் செய்யும் போது கே.எல்.ராகுலிடம் மன்னிப்பு கேட்டேன் : மேக்ஸ்வெல் டுவிட்

சனிக்கிழமை, 28 நவம்பர் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

சிட்னி : ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டரான மேக்ஸ்வெல்,  இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியாக அடி 19 பந்துகளில் 45 ரன்கள் விளாசியிருந்தார். ஆஸ்திரேலிய அணி 66- ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்த மேக்ஸ்வேலின் அதிரடி ஆட்டமும் முக்கிய காரணியாக இருந்தது. 

சிறந்த அதிரடி பேட்ஸ்மேனான மேக்ஸ்வெல் நடப்பு ஐ.பி.எல். சீசனில் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணிக்காக விளையாடிய மேக்ஸ்வெல், ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை.

11 இன்னிங்ஸ்களில் பேட் செய்து வெறும் 108 ரன்கள் மட்டுமே அடித்தார். அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட மேக்ஸ்வெல் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சேவாக் போன்றோர் சாடியிருந்தனர். 

இந்த நிலையில் மேக்ஸ்வெல் மற்றும் ஜேம்ஸ் நீஷம் இருவரும் சிறப்பாக விளையாடியதை கே.எல்.ராகுல் விரக்தியுடன் நின்று பார்ப்பது போன்ற புகைப்படத்தை டுவிட்டரில் நெட்டிசன் ஒருவர் வெளியிட்டு இருந்தார்.

இதற்கு பதிலளித்த ஜேம்ஸ் நீஷம், உண்மையில் இது மிகவும் நல்ல மீம் என்று பதிவிட்டு இருந்தார். இந்த டுவிட்டருக்கு பதிலளித்த மேக்ஸ்வெல், பேட்டிங் செய்து கொண்டிருந்த போது கே.எல் ராகுலிடம் மன்னிப்பு கோரி விட்டதாக கூறி ஸ்மைலி - யையும் பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து