முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சைக்கிளில் சென்ற பிரபல நடிகர் கவுதம் கார்த்திக்கின் செல்போன் பறிப்பு

புதன்கிழமை, 2 டிசம்பர் 2020      சினிமா
Image Unavailable

Source: provided

சென்னை : பிரபல நடிகரான கவுதம் கார்த்திக்கின் செல்போன் மர்ம நபர்களால் பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் 1980 மற்றும் 90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகர் கார்த்திக். இவர் 1000- க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 

இவரது மகன் கவுதம் கார்த்திக், 2013-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கடல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.  தொடர்ந்து என்னமோ ஏதோ, வை ராஜா வை, முத்துராமலிங்கம், ரங்கூன், ஹரஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து, தேவராட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் பல படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று காலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள டிகே சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார் கவுதம் கார்த்திக். அப்போது, இருசக்கர வாகனத்தில் அவரை பின் தொடர்ந்த மர்ம நபர்கள் நடிகர் கவுதம் கார்த்திக்கிடம் இருந்து செல்போனை பறித்துச் சென்றுள்ளனர்.  பறிபோன அவரது செல்போன் விலையுயர்ந்தது என தெரிகிறது.

தனது செல்போன் பறிபோனது தொடர்பாக மயிலாப்பூர் காவல் நிலையத்தில் கவுதம் கார்த்திக் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  மேலும் செல்போனை பறித்து சென்ற மர்ம நபர்களையும் தேடி வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து