Idhayam Matrimony

எவ்வித கட்டணமுமின்றி கொலை செய்யப்பட்ட பீகாரை சேர்ந்த 3 பேரின் உடல்களை சொந்த மாநிலத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 3 பெப்ரவரி 2026      தமிழகம்
Stalin 2024-12-04

சென்னை, வடமாநிலத்தைச் சேர்ந்த வாலிபர்களால் கடந்த சில நாட்களுக்கு கொலை செய்யப்பட்ட பீகாரை சேர்ந்த 3 பேரின் உடல்களை சொந்த மாநிலத்திற்கு தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் எவ்வித கட்டணமுமின்றி கொண்டு செல்ல முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- பீகார் மாநிலத்திலிருந்து வேலை தேடி சென்னைக்கு வந்த தம்பதியர் கவுரவ்குமார் அவரது மனைவி புனிதாகுமாரி மற்றும் அவரது 2 வயது குழந்தை ஆகியோர் வடமாநிலத்தைச் சேர்ந்த வாலிபர்களால் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட 3 குற்றவாளிகள் சென்னை மாநகர காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

கொலை செய்யப்பட்ட மூவரது உடல்களையும் அவர்களது சொந்த மாநிலத்திற்கு கொண்டு செல்ல உதவி தேவைப்படுகிறது என்ற செய்தியை அறிந்த முதல்வர்  மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் எவ்வித கட்டணமுமின்றி, அவர்களது உடல்களை சொந்த மாநிலத்திற்கு கொண்டு சென்று உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து