சென்னை : வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 20 சதவிகித இடஒதுக்கீடு வழங்க கோரி பா.ம.க.வினர் சென்னையில் போராட்டம் அறிவித்திருந்தனர். இதற்காக சென்னை வந்த பா.ம.க.வினர் வாகனங்களை தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் தடுத்தனர். இதனால் பா.ம.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 4 மணி நேரம் போக்குவரத்து முடங்கியது.
பெருங்களத்தூரில் ரெயில் தண்டவாளத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதோடு அந்த வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் மீது கற்களை வீசி அதை தடுத்து நிறுத்தினர். தாம்பரம் மேம்பாலத்தின் மேலும், அதன் கீழ் பகுதியிலும் பா.ம.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை பெருநகரில், 60-க் கும் மேற்பட்ட இடங்களில் போராட்டததிற்குச் சென்ற பா.ம.க.வினரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
இதையடுத்து சென்னையில் ரெயில் மறியல் போராட்டததில் ஈடுபட்டதாக பா.ம.க.வினர் 350 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.