தென் ஆப்பிரிக்க வீரருக்கு கொரோனா : இங்கிலாந்துடனான முதல் ஒருநாள் ஆட்டம் ஒத்திவைப்பு

வெள்ளிக்கிழமை, 4 டிசம்பர் 2020      விளையாட்டு
South-Africa-England 2020 1

Source: provided

கேப்டவுன் : தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் முடிந்த நிலையில், நேற்று  முதல் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்குவதாக இருந்தது. இரு அணி வீரர்களும் பாதுகாப்பு வளையத்திற்குள் உள்ளனர். 

நேற்றைய போட்டிக்கு தயாராகுவதற்கு முன் கடைசி கட்ட கொரோனா பரிசோதனை நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்டது, அப்போது தென்ஆப்பிரிக்கா வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.

இதனால் நேற்றைய போட்டி 6-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2-வது போட்டி 7-ந்தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி 9-ந்தேதியும் நடக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து