ஆஸி.க்கு எதிரான டி-20 தொடர் காயம் காரணமாக ஜடேஜா விலகல்

சனிக்கிழமை, 5 டிசம்பர் 2020      விளையாட்டு
Jadeja 2020 12 05

Source: provided

கான்பெர்ரா : இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி கான்பெர்ராவில் நடைபெற்றது. இதில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்யும்போது இந்திய அணியின் ஜடேஜா காயம் அடைந்தார். முதலில் ஹாம்ஸ்டிரிங் காயம் அடைந்தார். அதன்பின் மிட்செல் ஸ்டார்க் வீசிய பவுன்சர் பந்து ஹெல்மெட்டை தாக்கி கன்கசன் ஆனார். 

இந்த நிலையில் காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 தொடர் தொடரில் இருந்து இந்திய அணி வீரர் ஜடேஜா விலகியுள்ளார்.மீதமுள்ள இரண்டு டி20 போட்டியில் இருந்து ஜடேஜா விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக ஷர்துல் தாகூர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து