ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி முதல் தோல்வி

சனிக்கிழமை, 5 டிசம்பர் 2020      விளையாட்டு
Football 2020 12 05

Source: provided

கோவா : 11 அணிகள் பங்கேற்றுள்ள 7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் நடந்த 16-வது லீக் ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி, முன்னாள் சாம்பியன் பெங்களூரு எப்.சி.யை சந்தித்தது.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சென்னை அணி 0-1 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணியிடம் தோல்வி கண்டது. பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி பெங்களூரு வீரர் சுனில் சேத்ரி 56-வது நிமிடத்தில் வெற்றிக்கான கோலை அடித்தார்.

சென்னை அணியால் கடைசி வரை பதில் கோல் திருப்ப முடியவில்லை. 3-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணி சந்தித்த முதல் தோல்வி இதுவாகும். பெங்களூரு அணிக்கு இது முதலாவது வெற்றியாகும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து