எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாள்தோறும் தரிசனத்துக்கு 5 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதியளித்த கேரள ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டி்ல கேரள அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுக்குள் வைக்கப் போராடி வரும் மருத்துவப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்களுக்கு இந்த உத்தரவு பெரும் சுமையாக அமையும் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.
கேரளாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கருத்தில் கொண்டு சபரிமலை சீசனுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கையில் கேரள அரசு கட்டுப்பாடுகளை விதித்தது. இதன்படி வார நாட்களில் 2 ஆயிரம் பக்தர்களுக்கும், வார இறுதி நாட்களில் 3 ஆயிரம் பக்தர்களுக்கும் தரிசனத்துக்கு அனுமதியளிக்கப்பட்டு வருகிறது. இதை அதிகரிக்கக் கோரி கேரள ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் கடந்த 18-ம் தேதி தீர்ப்பளித்த கேரள ஐகோர்ட், நாள்தோறும் 5 ஆயிரம் பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதிக்கலாம் எனத் தெரிவித்தது. ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து கேரள அரசு சார்பில் வழக்கறிஞர் பிரகாஷ், சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், சபரிமலை ஐயப்பன் கோயில் சீசனின் போது, பக்தர்கள் அனுமதிப்பது குறித்து கேரள தலைமைச் செயலாளர் தலைமையில் உயர் மட்டக்குழு அமைத்து ஆலோசிக்கப்பட்டது. தலைமைச் செயலாளர், மருத்துவக் குழுவினர் ஆகியோர் மாநிலத்தில் நிலவும் கொரோனா பரவல், முன்களப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு வார நாட்களில் 2 ஆயிரம் பக்தர்களுக்கும், வார இறுதி நாட்களில் 3 ஆயிரம் பக்தர்களுக்கும் அனுமதி வழங்கலாம் எனப் பரிந்துரைத்தனர். அதன்படி தற்போது பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து, கொரோனா நெகட்டிவ் சான்றிதழுடன் விண்ணப்பம் செய்பவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. ஜனவரி 14-ம் தேதி வரை இந்த முறையையே கடைப்பிடிக்கலாம். கொரோனா பரவல் குறைந்தால், பக்தர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து தேவைக்கு ஏற்ப முடிவு எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், நாள்தோறும் 5 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதியளித்து ஐகோர்ட் கடந்த 18-ம் தேதி அனுமதியளித்துள்ளது. எந்தவிதமான ஆய்வு அறிக்கையும் இன்றி, முறையான ஆவணங்களைப் பரிசீலிக்காமல் இந்த அனுமதி தரப்பட்டுள்ளது. அதிகமான பக்தர்களை அனுமதித்தால், காவலர்கள், மருத்துவப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பக்தர்கள் ஆகியோரும் கொரோனாவில் அதிகமாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. பக்தர்கள் வருகையை அதிகப்படுத்தும்போது, அவர்கள் சமூக விலகலைக் கடைப்பிடித்து வருகிறார்களா என்பதை சபரிமலையில் பணியில் இருக்கும் காவலர்கள் ஆய்வு செய்வதும், பக்தர்களைக் கட்டுப்படுத்துவதும் கடினமானதாக அமையும். பிரிட்டனில் பரவி வரும் உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் அச்சத்தால் மத்திய அரசு அனைத்து விமானங்களையும் பிரிட்டனுக்கு தடை செய்துள்ளது. அதேபோன்ற சூழல்தான் கேரளாவிலும் ஏற்பட்டுள்ளது. ஆதலால், உடனடியாகத் தலையிட்டு, அதிகரிக்கப்பட்டுள்ள பக்தர்கள் எண்ணிக்கையைக் குறைத்து, கொரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
சாம்சனுக்கு பயிற்சியாளர் ஆதரவு
13 Sep 2025சஞ்சு சாம்சன் மிடில் ஆர்டரில் சொதப்புவார் என்று அர்த்தமில்லை என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சித்தான்சு கோட்டக் தெரிவித்துள்ளார்.
-
மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும் : எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்
13 Sep 2025சிங்காநல்லூர் : கோவையில் மெட்ரோ ரயில் பணிக்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது, ஆட்சி மாற்றத்தின் காரணமாக ஏதேதோ பிரச்னை சொல்லி முடக்கிவைத்துள்ளனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-09-2025.
14 Sep 2025