சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பாண்டியன் ஸ்டோர் உள்ளிட்ட பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை சித்ரா. இவர் கடந்த 9-ம் தேதி பூந்தமல்லி அருகே உள்ள நசரத்பேட்டையில் ஒரு தனியார் விடுதியில் தங்கி இருந்த போது, பூட்டிய அறைக்குள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்த வழக்கு தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. அவரது கணவர் ஹேம்நாத் (வயது 31) செய்த சித்ரவதை தாங்காமல்தான், சித்ரா தற்கொலை முடிவை எடுத்ததாக கூறப்பட்டது. இதனால் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், சித்ரா மரணம் தொடர்பான வழக்கை மத்தியக் குற்றப்பிரிவுக்கு மாற்றக் கோரி முதல்வரின் தனிப்பிரிவில் சித்ராவின் தாயார் விஜயா மனு செய்திருந்தார். இந்த சூழலில், சித்ராவின் தற்கொலை வழக்கு விசாரணையை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறைக்கு மாற்றம் செய்து, சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.