முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஜினி அரசியலுக்கு வர வலியுறுத்தி சென்னையில் ரசிகர்கள் ஆர்ப்பாட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 10 ஜனவரி 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : நடிகர் ரஜினிகாந்த், அரசியல் கட்சி தொடங்கப் போவதாகவும் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜனவரி மாதம் வெளியாகும் என்று கடந்த டிசம்பர் மாதம் தெரிவித்தார்.  ஆனால் இடையே ரஜினிகாந்துக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து கட்சி தொடங்கும் முடிவிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

உடல்நிலை காரணமாக தான் எடுத்த இந்த முடிவை மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறிய ரஜினிகாந்த், இதற்காக மக்களிடம் மன்னிப்பும் கேட்டார்.  ரஜினியின் அரசியல் வருகைக்காக பல ஆண்டுகளாக காத்துக் கிடந்த ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது.  ரஜினிகாந்த் மீண்டும் அரசியலுக்கு வர வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக இருந்தது. 

இந்நிலையில் ரஜினிகாந்தை அரசியலுக்கு வர வலியுறுத்தி, சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே ரசிகர்கள் சார்பில் அறவழி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து