முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒருபோதும் அரசியலுக்கு வரமாட்டேன்- நடிகர் ரஜினிகாந்த் திட்டவட்டம்

திங்கட்கிழமை, 11 ஜனவரி 2021      சினிமா
Image Unavailable

நான் அரசியலுக்கு வர வேண்டுமென்று கூறி என்னை யாரும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம், நான் ஒருபோதும் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று நடிகர் ரஜினி திட்டவட்டமாக கூறியுள்ளார்.

அரசியலுக்கு வருவேன் கட்சி தொடங்குவேன் என ரஜினிகாந்த் அறிவித்திருந்த நிலையில் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து அரசியல் முடிவைக் கைவிட்டார். அவர் அரசியலுக்கு வரவேண்டும் எனக் கோரி ரசிகர் மன்றத்தினரின் ஒரு பகுதியினர் சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நேற்று முன் தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரசிகர் மன்றத் தலைமை வேண்டாம் என்று கூறியும் போராட்டத்தில் ஈடுபட்டது குறித்து ரஜினி நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:–

என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கு நான் அரசியலுக்கு வராதது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரி சிலர் ரஜினி மக்கள் மன்றப் பொறுப்பில் இருந்தும் மன்றத்தில் இருந்தும், நீக்கப்பட்ட பலருடன் சேர்ந்து சென்னையில் ஒரு நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார்கள்.

கட்டுப்பாட்டுடனும் கண்ணியத்துடனும் நடத்தியதற்கு என்னுடைய பாராட்டுகள். இருந்தாலும் தலைமையின் உத்தரவை மீறி நடத்தியது வேதனை அளிக்கிறது. தலைமையின் வேண்டுகோளை ஏற்று இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத மக்கள் மன்றத்தில் இருக்கும் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி.

நான் ஏன் இப்பொழுது அரசியலுக்கு வர முடியவில்லை என்பதற்கான காரணங்களை ஏற்கனவே விரிவாகக் கூறியுள்ளேன். நான் என் முடிவைக் கூறிவிட்டேன். தயவுசெய்து இதற்குப் பிறகும் நான் அரசியலுக்கு வர வேண்டும் என்று யாரும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தி என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து