லண்டனிலிருந்து டெல்லி வந்த 4 பேருக்கு கொரோனா

திங்கட்கிழமை, 11 ஜனவரி 2021      உலகம்
London 2021 01 11

ஏர் இந்தியா விமானம் மூலம் லண்டனிலிருந்து டெல்லி வந்த 4 பயணிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரிட்டனில் புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து, அங்கிருந்து இந்தியாவிற்கு வரும் அனைத்து விமானச் சேவைகளும் டிசம்பர் 23 முதல் ஜனவரி 7 வரை மத்திய அரசால் நிறுத்தப்பட்டிருந்தது.

இதனையடுத்து பல்வேறு கட்டுபாடுகளுடன் கடந்த 8–ந் தேதி முதல் இங்கிலாந்து நாட்டிற்கு மீண்டும் விமானச் சேவை தொடங்கியது. ஏர் இந்தியாவின் ஏ.ஐ–162 விமானம் இரவு 10.30 மணியளவில் 186 பயணிகளுடன் லண்டனிலிருந்து டெல்லி விமான நிலையத்தில் வந்து தரையிறங்கியது.

விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளுக்கும் ஆர்.டி-பி.சி.ஆர் சோதனை செய்யப்பட்டது. இதில் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இது புதிய வகை கொரோனாவா? என்பது பரிசோதனைக்கு பின்னரே தெரிய வரும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து