முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திராவில் மாடுவிடும் விழா, சேவல் சண்டைக்கு தடை

திங்கட்கிழமை, 11 ஜனவரி 2021      இந்தியா
Image Unavailable

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை ஆந்திராவில் மகா சங்கராந்தி என்று கொண்டாடப்படுகிறது. இங்கு ஜல்லிகட்டு, சேவல் சண்டை நடப்பது போல் அங்கும் மாடு விடும் விழா, சேவல் சண்டை போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த ஆண்டு கொரோனா விதிமுறைகளால் மாடு விடும் விழா, சேவல் சண்டை போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சித்தூர் போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆந்திர மாநிலம் முழுவதும் வருகின்ற 14-ந்தேதி மகர சங்கராந்தி (பொங்கல்) பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையில் பொதுமக்கள் வீட்டில் பொங்கல் வைத்து கோலாகலமாக கொண்டாடுவார்கள். மேலும் கிராமங்களில் சேவல் சண்டை மற்றும் மாடு விடும் விழா நடத்தப்படுவது வழக்கம்.

ஆனால் தற்போது கொரோனா தொற்று பரவி வருவதால் சேவல் சண்டை மற்றும் மாடு விடும் விழா நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. விதிமீறி செயல்படுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து