முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

10 மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவல்

திங்கட்கிழமை, 11 ஜனவரி 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடில்லி : இந்தியாவில் நேற்று வரை 10 மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவியுள்ளதாக, மத்திய மீன், விலங்குகள் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கேரளாவில், ஆலப்புழா, கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் பறவை காய்ச்சல் பரவி வருகிறது. ஹரியானா, ராஜஸ்தான், இமாச்சல பிரதேசம், குஜராத், உ.பி., மாநிலங்களிலும் பறவை காய்ச்சல் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. காகம் உள்ளிட்ட பறவைகளின் மாதிரிகளில் பறவை காய்ச்சல் உறுதியாகியுள்ளது.

மத்திய மீன், விலங்குகள் நலத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை வருமாறு :- 

நேற்று வரை 10 மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் பரவியுள்ளது உறுதியாகியுள்ளது. ஆய்வுகளில், ராஜஸ்தானின் டோங்க், கரவுலி, பில்வாரா மாவட்டங்களிலும், குஜராத்தின் வல்சாத் மற்றும் சூரத் மாவட்டங்களில் இறந்து போன காகம் மற்றும் வனப்பறவைகளின் மாதிரிகளில் பறவை காய்ச்சல் உறுதியாகியுள்ளது.

மஹாராஷ்டிராவில், மும்பை, தானே, பீட் மாவட்டங்களிலும், பர்பானி மாவட்டத்தில் பண்ணைகள் அமைந்த பகுதிகளிலும், ரத்னகிரி மாவட்டத்தில், தபோலி பகுதியிலும் பறவை காய்ச்சல் உறுதியாகியுள்ளது.

உத்தர்கண்டின் கோட்வர், டேராடூன் மாவட்டங்களில் உயிரிழந்த காகங்களிலும், டெல்லியில் உயிரிழந்த காகங்கள் மற்றும் வாத்துகளிலும் பறவை காய்ச்சல் உறுதியாகியுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து