சென்னை : தமிழக சட்டசபை தேர்தலை நடத்த ரூ. 621 கோடி தேவை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.
தமிழக சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் தீவிரமாக செய்து வருகிறது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை பெறும் நடவடிக்கைகள் முடிவடைந்து விட்டன. இந்த மனுக்கள் மீதான பரிசீலனை நடந்து வருகிறது. இறுதி வாக்காளர் பட்டியல் வருகிற 20-ம் தேதி வெளியிடப்படுகிறது. இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக தேர்தல் கமிஷன் எடுத்துள்ளது.
இந்நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக சட்டசபை தேர்தலை நடத்துவதற்கு மாநில அரசிடம் ரூ.621 கோடி கேட்டுள்ளோம். கொரோனா காலம் என்பதால் செலவு தொகை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.