Idhayam Matrimony

தமிழ்நாடு உள்ளிட்ட 3 மாநில சட்டசபை தேர்தலுக்கான பா.ஜ.க. பொறுப்பாளர்கள் நியமனம்

வியாழக்கிழமை, 25 செப்டம்பர் 2025      இந்தியா
BJP-Office

புதுடெல்லி, தமிழ்நாடு உள்ளிட்ட 3 மாநில சட்டசபை தேர்தலுக்கு பா.ஜ.க. பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியிலும், மேற்கு வங்காளம், தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டும் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தல்களில் பா.ஜ.க. வெற்றி பெறும் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.  

இந்தநிலையில், தமிழ்நாடு, பீகார், மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தலுக்கான பொறுப்பாளர்களை பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நியமித்துள்ளார். அதன்படி, தமிழகத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் வைஜெயந்த் பாண்டா தமிழக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய இணை மந்திரி முரளிதர் மொகலும் இணைப்பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பீகார் மாநில சட்டசபை தேர்தல் பொறுப்பாளராக தர்மேந்திர பிரதான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். துணை பொறுப்பாளர்களாக சி.ஆர்.பாட்டில் மற்றும் கேசவ் பிரசாத் மவுரியா நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், மேற்கு வங்காளம் சட்டசபை தேர்தல் பொறுப்பாளராக பா.ஜ.க. தலைவர் பூபேந்திர யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். பிப்லாப் குமார் தேப் இணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து