எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, சென்னையில் ஆபரணத்தங்கம் விலை நேற்று சவரன் ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ,82,160க்கு விற்பனையானது. ஆபரணத்தங்கத்தின் விலை கிராம் ரூ.10 குறைந்து, ஒரு கிராம் ரூ.10,270க்கு விற்பனையானது.
உலக நாடுகள் இடையிலான போர் பதற்றம், பொருளாதார மந்தநிலை, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் வர்த்தக போரால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்தது. இதனால் பங்குச்சந்தைகளில் முதலீடு குறைந்து, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருகிறது. இதனால் தங்கம் விலை கடந்த சில வாரங்களாக வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
தொடர்ந்து நிலவும் பொருளாதார மந்தநிலை, முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் மீது அதிகளவில் திரும்பியுள்ளது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஒரு முடிவே இல்லாத உயரத்தை நோக்கி தங்கம் விலை செல்கிறது. கடந்த 7-ந்தேதி ஒரு சவரன் ரூ.80 ஆயிரம் என்ற உச்சத்தை தொட்ட நிலையில், தொடர்ந்து விலை அதிகரித்து, 9-ந்தேதி ரூ.81 ஆயிரம் என்ற நிலையையும் கடந்தது. இந்த நிலையில் மீண்டும் விலை எகிறியது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.70-ம், சவரனுக்கு ரூ.560-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 280-க்கும், ஒரு சவரன் ரூ.82 ஆயிரத்து 240-க்கும் விற்பனை ஆனது. இதன் மூலம் இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தையும் தொட்டுவிட்டது.
இந்நிலையில் நேற்று தங்கம் விலை சற்று குறைந்து விற்பனையானது. இதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரன் ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ,82,160க்கு விற்பனையானது. ஆபரணத்தங்கத்தின் விலை கிராம் ரூ.10 குறைந்து, ஒரு கிராம் ரூ.10,270க்கு விற்பனையானது. தங்கம் விலையை போல, வெள்ளி விலையும் நேற்று முன்தினம் உச்சத்தை எட்டி இருந்தது. நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.1-ம், கிலோவுக்கு ரூ.1,000-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.144-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 44 ஆயிரத்துக்கும் விற்பனையானது. இந்நிலையில் நேற்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ஒரு கிராம் ரூ. 142-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்திற்கும் விற்பனையானது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


