முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவையில் 2 நாட்கள் உலக புத்தொழில் மாநாடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

வியாழக்கிழமை, 25 செப்டம்பர் 2025      தமிழகம்
Stalin 2024-12-04

கோவை, அடுத்த மாதம் 9,10 ஆகிய தேதிகளில் கோவையில் 2 நாட்கள் உலக புத்தொழில் மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த மாநாட்டில் 19 நாடுகளில் இருந்து 264 பங்கேற்பாளர்களுடன் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்கள் பங்கேற்க உள்ளனர். 

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் கோவையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- வருகிற அக்டோபர் மாதம் 9,10 ஆகிய தேதிகளில் உலக புத்தொழில் மாநாடு கோவையில் நடைபெற உள்ளது. முதல்நாள் நிகழ்ச்சியில் முதல்வர்  மு.க.ஸ்டாலின் பங்கேற்று மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.

இந்த மாநாட்டிற்கான லோகோவையும் இணையதளத்தையும் துணை முதல்வர்  உதயநிதி ஸ்டாலின் கடந்த ஏப்ரல் மாதம் தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் 19 நாடுகளில் இருந்து 264 பங்கேற்பாளர்களுடன் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்கள் பங்கேற்க உள்ளனர். இந்தியாவில் முன்னணியில் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், மத்திய அரசின் 10 துறைகளும், 10 மாநிலங்களின் அரசுத்துறைகளும் பங்கேற்க உள்ளன. 750-க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகள் அமைக்கப்படுகிறது. 315-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் இந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்க எந்த நடவடிக்கைகளும் எடுக்காத நிலையில், தற்போது முதல்வர்  மு.க.ஸ்டாலின், ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தலைமை செயல் அலுவலர் பதவியுடன் 70-க்கும் மேற்பட்ட பணியாளர்களை நியமித்து, தமிழ்நாட்டில் மிகச்சிறப்பாக இந்த ஸ்டார்ட் அப் செயல்பட்டு கொண்டிருக்கிறது.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஸ்டார்ட் அப் தொழில் வளர்ச்சியில் தமிழகம் கடைசி இடத்தில் இருந்தது. 2021-ம் ஆண்டு மூன்றாம் இடத்திற்கு முன்னேறி, லீடர் விருதை பெற்றோம். 2022-ல் சிறந்த செயல்பாட்டாளர் விருதை பெற்றது. தற்போது முதல் இடத்தில் நிற்கிறோம். இந்தியாவின் இதுவரை எங்கும் நடக்காத ஸ்டார்ட்அப் மாநாடு நடைபெறுகிறது. மற்ற மாநிலங்கள் வியக்கக்கூடிய அளவில் இது நிச்சயம் அமையும். இவ்வாறு அவர் கூறினார்.

சிறுகுறு தொழிலாளர்களுக்கு, லைசென்ஸ் முதற்கொண்டு மின் இணைப்பு வரை எதுவும் விரைவாக கிடைப்பது இல்லை என குற்றம் சாட்டுகிறார்களே என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு எந்த பகுதியில் பிரச்சனை என்று கூறுங்கள், அதை நிச்சயம் சரிசெய்து கொடுக்க நடவடிக்கை எடுப்போம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து