முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜி.கே.மணியின் பதவி பறிப்பு: பா.ம.க. சட்டப்பேரவை குழு தலைவரானார் வெங்கடேஸ்வரன்

வியாழக்கிழமை, 25 செப்டம்பர் 2025      தமிழகம்      அரசியல்
Venkateswaran-2025-09-25

சென்னை, பா.ம.க. சட்டமன்ற குழு தலைவராக வெங்கடேஸ்வரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் அங்கம் வகித்த பா.ம.க. 5 இடங்களில் வெற்றி பெற்றது. சட்டமன்ற பா.ம.க. தலைவராக ஜி.கே.மணியும், கொறாடாவாக அருளும் இருந்து வந்தனர்.  இந்த நிலையில், தற்போது பா.ம.க.வில் பிளவு ஏற்பட்டு கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் ஒரு அணியும், அவரது மகனும், கட்சியின் தலைவருமான டாக்டர் அன்புமணி தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டு வருகிறது. 

பா.ம.க.வில் உள்ள 5 எம்.எல்.ஏ.க்களில் ஜி.கே.மணி, அருள் ஆகியோர் டாக்டர் ராமதாஸ் அணியில் உள்ளனர். மற்ற 3 பேரும் டாக்டர் அன்புமணி அணியில் இருக்கின்றனர். இதற்கிடையே, அடுத்த மாதம் (அக்டோபர்) 14-ந் தேதி தமிழக சட்டசபை கூட இருக்கிறது. எனவே, டாக்டர் அன்புமணி தரப்பினர் வக்கீல் கே.பாலு தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டசபை செயலாளர் சீனிவாசனை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அதில், சட்டமன்ற தலைவர் பொறுப்பில் இருந்து ஜி.கே.மணியையும், கொறடா பொறுப்பில் இருந்து அருளையும் நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதன்பின்னர், வெளியே வந்த நிலையில், சட்டசபை வளாகத்தில் வக்கீல் கே.பாலு நிருபர்களிடம் கூறியதாவது:-

பா.ம.க.வின் சட்டமன்ற குழு தலைவராக இருந்த ஜி. கே. மணியின் பதவி பறிக்கப்பட்டு அந்த பதவியில் வெங்கடேஸ்வரன் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், பா.ம.க. சட்டமன்ற கொறடாவாக விழுப்புரம் மாவட்டம், மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான கடிதத்தை சட்டமன்ற செயலகத்திடம் அளித்தும் அதற்கான பதில் தற்போது வரை கிடைக்கவில்லை. 

அக்டோபர் 14-ம் தேதி நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடரில் பா.ம.க.வின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தர்மபுரி வெங்கடேசனுக்கு இருக்கை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவுவிடம் தெரிவித்துள்ளோம். இது தொடர்பாக வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் பரிசீலனை செய்து உரிய அங்கீகாரத்தை பெற்றுத் தருவதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

அனைத்து கட்சி கூட்டம் உள்ளிட்டவற்றுக்கு எங்களையே அழைக்க வேண்டும். பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் 5 பேரில் 3 பேரின் ஆதரவு அன்புமணிக்கே உள்ளது. கர்நாடகா, டெல்லி, ஆந்திர மாநில தேர்தல்களில் பா.ம.க. போட்டியிட்டுள்ளது. எதிர்வரும் பீகார் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தலைமை முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து