பெண் குழந்தை பிறந்ததையொட்டி வீராட் கோலிக்கு மேலும் விளம்பரங்கள் அதிகரிப்பு

புதன்கிழமை, 13 ஜனவரி 2021      விளையாட்டு
Virat-Kohli 2021 01 13

Source: provided

புதுடெல்லி  இந்திய கிரிக்கெட் அணியின் 3 வடிவிலான போட்டிக்கு (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) வீராட் கோலி கேப்டனாக உள்ளார்.

உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக வீராட் கோலி திகழ்கிறார். தனது விளையாட்டு மூலம் மட்டுமில்லாமல் விளம்பரங்கள் வாயிலாகவும் அவர் கோடிக் கணக்கில் பணம் சம்பாதிக்கிறார்.

கிரிக்கெட் வீரர்களில் விளம்பரங்கள் மூலம் அதிக பணம் சம்பாதிக்கும் வீரராக வீராட் கோலி திகழ்கிறார். அவரது பிராண்ட் மதிப்பும் அதிகமாக இருக்கிறது. இதுதவிர இன்ஸ்ட்ராகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாகவும் அவர் தனது வருவாயை பெருக்கிக் கொண்டுள்ளார்.

வீராட் கோலி- அனுஷ்கா சர்மா தம்பதிக்கு சமீபத்தில் பெண்குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த தகவலை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பெண் குழந்தை பிறந்ததையொட்டி மேலும் பல்வேறு விளம்பர நிறுவனங்கள் அவரை மொய்த்துள்ளன. குழந்தைகளுக்குரிய பேம்பர்ஸ், ஷூ மற்றும் குளிர்பான நிறுவனங்கள் அவரை ஒப்பந்தம் செய்வதற்காக சமூக வலை தளங்கள் மூலம் தொடர்பு கொண்டுள்ளன.

ஆனால் கோலி இதுவரை ஒப்பந்தத்தில் கையெழுத்து இடவில்லை. விரைவில் அவர் அதில் கையெழுத்து இடுவார். இதன் மூலம் அவரது விளம்பரங்கள் மேலும் அதிகரிக்கும். வீராட் கோலி ஏற்கனவே பல்வேறு விளம்பர நிறுவனங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து