எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஈரோடு, தி.மு.க. ஆட்சிக்கு வந்த முதல் நாள் எப்படி வரவேற்பு இருந்ததோ அதைவிட தற்போது கூடுதல் வரவேற்பு கிடைக்கிறது என்று தெரிவித்துள்ள அமைச்சர் முத்துசாமி, எந்த கட்சியும் 5 ஆண்டு காலத்தை முடிக்கும்போது சில சங்கடங்களை சந்திக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில், வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழக வெற்றிக் கழகம், எம்.ஜி.ஆரை கையில் எடுப்பதாக கூறுகின்றனர். அவ்வாறு யாரும் கையில் எடுக்க முடியாது. தி.மு.க. மீது எம்.ஜி.ஆர். எவ்வளவு பற்று வைத்திருந்தார் என கருணாநிதி உள்பட அனைவரும் அறிவார்கள். விஜய் பேசியது குறித்து மக்கள் தான் முடிவு எடுக்க வேண்டியது. இந்த முடிவை யாரும் தனியாக எடுத்துவிட முடியாது. தி.மு.க. நல்ல சக்தியாக இருந்ததால் தான் இவ்வளவு காலமாக மக்கள் நம்பி ஆட்சியை கொடுத்திருக்கிறார்கள்.
எந்த கட்சியும் 5 ஆண்டு காலத்தை முடிக்கும்போது சில சங்கடங்களை சந்திக்கும். ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்த முதல் நாள் எப்படி வரவேற்பு இருந்ததோ அதைவிட தற்போது கூடுதல் வரவேற்பு கிடைக்கிறது. அதற்கு காரணம் இந்த கட்சியை, ஆட்சியை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். 2026-ம் ஆண்டு தேர்தலிலும் முதல்வராக மு.க.ஸ்டாலினை கொண்டு வர வேண்டும் என மக்கள் தயாராக உள்ளனர்.
தி.மு.க.வுக்கு அதிகளவில் இளைஞர்கள் வந்தால் மூத்த நிர்வாகிகள் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணத்தை, இந்த ஆட்சி அமைந்த முதல் நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார். அது தேர்தலுக்காக செய்யப்பட்டதல்ல. அதுபோல் நடப்பு பொங்கல் பண்டிகைக்கும் ரேஷன்கடைகள் மூலம் பணம் வழங்குவது என்ற முடிவை அரசு எடுத்தால் அது தேர்தலுக்கானதல்ல. ஏதாவது ஒரு காரணத்தை கூறாமல், மக்கள் நன்மைக்காக செய்யப்படுவதாக பாருங்கள். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


