தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் : தொடக்க ஆட்டத்தில் சிந்து அதிர்ச்சி தோல்வி

புதன்கிழமை, 13 ஜனவரி 2021      விளையாட்டு
PV-Sindhu 2021 01 13

Source: provided

பாங்காக் : தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில்  தொடங்கியது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக சாம்பியனும், தரவரிசையில் 7-வது இடத்தில் இருப்பவருமான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, தரவரிசையில் 18-வது இடத்தில் உள்ள டென்மார்க் வீராங்கனை மியா பிலிச்பெல்டை சந்தித்தார்.

78 நிமிடம் நீடித்த இந்த ஆட்டத்தில் சிந்து 21-16,24-26, 13-21 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 10 மாத இடைவெளிக்கு பிறகு சர்வதேச போட்டியில் களம் கண்ட சிந்து முதல் ஆட்டத்திலேயே தோல்வியை சந்தித்து ஏமாற்றம் அளித்தார்.

ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 13-வது இடத்தில் உள்ள இந்திய வீரர் சாய் பிரனீத் 16-21, 10-21 என்ற நேர்செட்டில் கன்டபோன் வாங்சரோனிடம் (தாய்லாந்து) தோல்வி அடைந்து நடையை கட்டினார்.

கலப்பு இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ்-அஸ்வினி ஜோடி 21-11, 27-29, 21-16 என்ற செட் கணக்கில் இந்தோனேஷியாவின் ஹபிஸ் பைஜல்-குளோரியா விட்ஜே இணையை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து