முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசு அனுமதித்தால் நானும் தடுப்பூசி போட்டு கொள்ள தயார்: அமைச்சர் சி.விஜயபாஸ்கர் திட்டவட்டம்

வெள்ளிக்கிழமை, 15 ஜனவரி 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

புதுக்கோட்டை : மத்திய அரசு அனுமதித்தால், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள தயார் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் இன்று கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்க உள்ளன.  புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடும் பணிக்காக தயார் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை நேற்று  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர் கூறியதாவது: -

தமிழ்நாட்டில் 166 இடங்கள் கொரோனா தடுப்பூசி போடுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 10199 மருத்துவ முன்களப் பணியாளர்கள் அவர்களின் சுயவிருப்பத்தின் அடிப்படையில் ஒப்புதல் பெறப்பட்டு கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தான் முதல்கட்டமாக தடுப்பூசி போடப்படுகிறது.

இத்துடன் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிரபல மருத்துவ, முக்கிய பிரமுகர்களும் தடுப்பூசியைப் போட்டு கொள்வதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. 

மருத்துவப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் சுதா சேஷய்யன், அப்போலோ மருத்துவக் குழுமத் தலைவர் பிரதாப் ரெட்டி, இந்திய மருத்துவக் கழகத்தின் அகில இந்தியத் தலைவர், மாநிலத் தலைவர் உள்பட மருத்துவப் பிரபலங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர்.

அனுமதி பெற்ற முன்கள பணியாளர்களுக்கு மட்டுமே தற்போது தடுப்பூசி போடப்படுகிறது  மத்திய அரசு அனுமதித்தால், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள நானும் தயார் என்று கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து