டி.குன்னத்தூரில் அமையப் பெற்றுள்ள அம்மா கோவில் திறப்பு விழாவிற்கு குடும்பம், குடும்பமாக வாருங்கள்: அம்மா பேரவை ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அழைப்பு

திங்கட்கிழமை, 18 ஜனவரி 2021      தமிழகம்
Amma 2021 01 18

Source: provided

சென்னை : மதுரை மாவட்டம் டி.குன்னத்தூரில் அமையப் பெற்றுள்ள அம்மா கோவில் திறப்பு விழாவிற்கு குடும்பம், குடும்பமாக வாருங்கள் என்று நேற்று சென்னையில் நடந்த அம்மா பேரவை ஆலோசனை கூட்டத்தில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சிக்காகவும், தமிழக மக்களின் நலனுக்காகவும், தன்னையே அர்ப்பணித்து தவவாழ்வு வாழ்ந்து மக்கள் அனைவரது இதயங்களிலும் நிரந்தரமாக வீற்றிருக்கும் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 73-ஆவது பிறந்த நாளை கழக அம்மா பேரவையின் சார்பில் எழுச்சியுடன் கொண்டாடுவது சம்பந்தமாக, கழக அம்மா பேரவையின் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தலைமைக் கழகத்தில் நேற்று  நடைபெற்றது.

அம்மா பேரவைச் செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.  

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அ.தி.மு.க. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கலந்துகொண்டு அம்மா அவர்களின் பிறந்த நாளை ஏழை, எளியோர் பயன்பெறும் வகையில் சிறப்பாகக் கொண்டாடுவது சம்பந்தமாகவும், விரைவில் நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலில், அம்மா பேரவை நிர்வாகிகள் துடிப்புடன் களப்பணி ஆற்றுவது குறித்தும் ஆலோசனை வழங்கினார். 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தலைமைக் கழக நிர்வாகிகள்,  கழக புரட்சித் தலைவி அம்மா பேரவையின் மாநில துணை நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினார்கள்.  

இக்கூட்டத்தில் கழக அம்மா பேரவையின் மாவட்டச் செயலாளர்களும், மாவட்ட நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.   

அம்மா பேரவையின் சார்பில் தலைமைக் கழகத்தில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தை முன்னிட்டு, தலைமைக் கழக நுழைவு வாயிலில் முகப்பு அமைக்கப்பட்டு, செண்டை மேளம் முழங்க, சாலைகளின் 

இரு மருங்கிலும் கழகக் கொடித் தோரணங்களும், குருத்தோலைகளும் அழகுற அமைக்கப்பட்டு, விழாக் கோலம் பூண்டிருந்தது.  

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும், அம்மா பேரவைச் செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் 

தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் செய்திருந்தார்.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வறுமாறு:-

வருகின்ற 30.01.2021 சனிக்கிழமை அன்று பாரத ரத்னா எம்.ஜி.ஆர். அவர்களுக்கும், தமிழர் குலச்சாமி புரட்சித் தலைவி இதயதெய்வம் அம்மா அவர்களுக்கும், மதுரை மாவட்டம், திருமங்கலம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, கூ.கல்லுப்பட்டியில் உள்ள டி.குன்னத்தூரில் அமையப்பெற்றுள்ள தமிழர் குலச்சாமி அம்மாவின் திருக்கோவில் திறப்பு விழாவிற்கு  முதலமைச்சர் எடிப்பாடியார் அவர்களும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்  அவர்களும் நேரில் வருகைதந்து, தங்களது பொற்கரங்களால் “அம்மா ஆலயத்தை திறந்து வைத்து” புரட்சித்தலைவர், புரட்சிதலைவியின் திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து, வழிபட்டு வணங்கி நல் ஆசி பெற்று, நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பிக்கும் இவ்விழாவில்  அமைச்சர் பெருமக்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழக செயலாளர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கிளைக்கழக, ஒன்றிய கழக, பேரூர் கழக, நகர கழக, உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் தொண்டாற்றி வருகின்ற அம்மாவின் தூய தொண்டர்கள் அனைவரையும் குடும்பம் குடும்பமாக, பங்கேற்க செய்வதோடு கழகம் தொடங்கிய காலத்திலிருந்து கழகத்திற்கு தொண்டாற்றி வருகின்ற கழகத்தின் மூத்த தொண்டர்களின் உழைப்பை கௌரவிக்கும் விதமாக, 234 தொகுதிகளிலும், மாவட்டக் கழகங்களின் மூலம், கழக புரட்சித் தலைவி அம்மா பேரவை சார்பில் மூத்த கழகத் தொண்டர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு குடும்ப நல நிதி, திருவிளக்கு உள்ளிட்ட பாராட்டு பரிசுகளையும் வழங்கி, தன்னலமற்ற ஊழைப்பினை வாழ்த்தி, பொன்னாடையும், மாலையும் அணிவித்து, சிறப்பு செய்திவுடம் ஆலயத்தினை திறந்துவைத்து இருபெரும் தலைவர்களின்  திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து, நாள்தோறும் வழிபாடு நடத்தி அருளாசி பெற்றிடவும், வரலாறு படைக்கின்ற வகையில் இவ்விழாவினை சிறப்பாக நடத்திடுவோம். 

தமிழர்குலச்சாமி அம்மா அவர்களின் 73-வது பிறந்த தின நன்நாளை முன்னிட்டு நாடெங்கும் விளையாட்டுப் போட்டிகள், மரம் நடுவிழா, மருத்துவ முகாம், ரத்த தானம், கண் தானம், உடல் தானம், அன்னதானம், பசுதானம் உள்ளிட்ட தான தருமங்களையும், நலத்திட்ட உதவிகளையும் அம்மா அவர்களின் திருப்பெயரிலே நாளெல்லாம் நாட்டுமக்களுக்கு வழங்கி, அம்மாவின் புகழை அழியாப் புகழாக நீடித்த புகழலாக, நிலைத்தப் புகழாக, இந்த வான் உள்ளவரை, இந்த பூமி உள்ளவரை, இந்த வையகம் உள்ளவரை எந்நாளும் கட்டிக் காத்திட கழக புரட்சித் தலைவி அம்மா பேரவை உறுதி ஏற்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து