முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அண்ணா நினைவு இல்லத்தில் முதல்வர் எடப்பாடி மரியாதை

புதன்கிழமை, 20 ஜனவரி 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி அண்ணா நினைவு இல்லத்தைப் பார்வையிட்டார்.   

ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத் ஆகிய பகுதிகளில் நேற்று பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்திற்குச் சென்று அங்குள்ள புகைப்படங்களைப் பார்வையிட்டார். பின்னர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  

அறிஞர் அண்ணா பிறந்த இல்லம் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த காலத்தில் அரசின் கட்டுப்பாட்டில் நினைவில்லமாக மாற்றப்பட்டது. காஞ்சிபுரத்திற்கு வரும் திராவிடக் கட்சியினர் அண்ணா நினைவில்லத்துக்குச் செல்வது வழக்கமாக உள்ளது 

காஞ்சிபுரத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று பிற்பகல் செங்கல்பட்டு மாவட்டத்திலும், இன்று திருவள்ளூர் மாவட்டத்திலும் பிரசாரம் மேற்கொள்ளவிருப்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து