பைடன் நிர்வாகத்தில் முக்கிய பொறுப்பு வகிக்கும் இந்திய அமெரிக்கர்கள்

வியாழக்கிழமை, 21 ஜனவரி 2021      உலகம்
Biden-indian-2021 01 21

அமெரிக்காவின் 46-வது அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடன், தனது தலைமையிலான புதிய அரசில் முக்கிய பொறுப்புகளுக்கு பொருத்தமான தலைவர்களையும், அதிகாரிகளையும் நியமனம் செய்துவருகிறார். இதில், இந்திய வம்சாவளியினருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார் பைடன். பைடன் அரசாங்கத்தில் முக்கிய பொறுப்பு வகிக்கும் இந்திய வம்சாவளியினரை பார்ப்போம்.

 • கமலா ஹாரிஸ் -துணை அதிபர்
 • விவேக் மூர்த்தி - தலைமை அறுவை சிகிச்சை வல்லுநர்
 • நீரா டாண்டன் - மேலாண்மை மற்றும் பட்ஜெட் அலுவலக இயக்குனர்
 • வனிதா குப்தா - உதவி அட்டர்னி ஜெனரல்
 • சுமோனா குகா - தெற்காசியாவுக்கான தேசிய பாதுகாப்பு கவுன்சில் முதுநிலை இயக்குனர் 
 • தருண் சாப்ரா - தொழில்நுட்பம், தேசிய பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் முதுநிலை இயக்குனர்
 • சாந்தி கலாத்தில் - ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் கவுன்சில், தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஒருங்கிணைப்பாளர்
 • கவுதம் ராகவன் - அதிபருக்கான அதிகாரிகள் அலுவலக துணை இயக்குனர்
 • பரத் ராமமூர்த்தி -தேசிய பொருளாதார கவுன்சில் துணை இயக்குனர்
 • மாலா அடிகா - அதிபரின் மனைவி டாக்டர் ஜில் பைடனின் கொள்கை இயக்குனர்
 • வினய் ரெட்டி -  அதிபரின் உரையை எழுதி தரும் குழுவின் இயக்குனர் 
 • வேதாந்த் பட்டேல் -வெள்ளை மாளிகை ஊடகப்பிரிவு உதவி செயலாளர்
 • சப்ரினா சிங் -துணை அதிபர் அலுவலக ஊடகப்பிரிவு துணை செயலாளர்
 • ஆயிஷா ஷா - வெள்ளை மாளிகை டிஜிட்டல் கொள்கை அலுவலக பார்ட்னர்ஷிப் மேலாளர்
 • கரிமா வர்மா - அதிபரின் மனைவி அலுவலக டிஜிட்டல் பிரிவு இயக்குனர்
 • சோனியா அகர்வால் - பருவநிலை கொள்கை, கண்டுபிடிப்பு தொடர்பான மூத்த ஆலோசகர்
 • நேகா குப்தா - வெள்ளை மாளிகை ஆலோசனை அலுவலக உதவி ஆலோசகர்
 • ரீமா ஷா - வெள்ளை மாளிகை ஆலோசனை அலுவலக துணை உதவி ஆலோசகர்
 • சமீரா பாஸிலி -வெள்ளை மாளிகை தேசிய பொருளாதார கவுன்சில் துணை இயக்குனராகவும் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து