முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வட இந்திய மாநிலங்களில் வாட்டி வதைக்கும் கடும் குளிர்

வெள்ளிக்கிழமை, 22 ஜனவரி 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : வட மாநிலங்களில் பனி மூட்டத்தால் பார்வை புலப்பாடு குறைந்ததால் வாகனங்கள் மெதுவான வேகத்தில் இயக்கப்படுகின்றன.

டெல்லி, பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடுங்குளிர் நிலவுகிறது. இதனால் வடக்கு ரயில்வேக்குட்பட்ட பகுதிகளில் 10 விரைவு ரயில்கள் பலமணி நேரம் தாமதமாக செல்கின்றன.  டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 6.8 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

காலை எட்டரை மணி வரையிலும் கடும் பனிமூட்டம் காணப்பட்டதால் பார்வைப் புலப்பாடு குறைந்துள்ளது.  இதனால் வாகனங்கள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடி மெதுவாகச் செல்கின்றன. வடக்கு ரயில்வேக்குட்பட்ட 10 விரைவு ரயில்கள் பல மணி நேரம் தாமதமாகச் செல்கின்றன.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து