இனிமேல் ஆஸ்திரேலியா சிறந்த அணி கிடையாது: இந்தியாவை இங்கிலாந்து வீழ்த்த வேண்டும் - ஸ்வான்

வெள்ளிக்கிழமை, 22 ஜனவரி 2021      விளையாட்டு
Swan 2021 01 22

Source: provided

பிரிட்டன் : ஆஸ்திரேலியா மண்ணில் இந்தியா தொடர்ச்சியாக இரண்டு முறை டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. இங்கிலாந்து ஆஸ்திரேலியா மண்ணில் ஆஷஸ் தொடரை வெல்ல துடிக்கிறது. 

இனிமேல் ஆஸ்திரேலியா சிறந்த அணி கிடையாது. இந்திய மண்ணில் இங்கிலாந்து தொடரை வெல்ல வேண்டும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கிரீம் ஸ்வான் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து கிரீம் ஸ்வான் மேலும் கூறுகையில் ஆஷஸ் தொடர் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதில் இருந்து நான் விலக வேண்டும். தற்போது இந்திய அணியை இந்திய மண்ணில் வீழ்த்துவதுதான் மிகப்பெரிய விஷயமாக இருக்கும் என நான் நினைக்கிறேன். 2012-ம் ஆண்டு இங்கிலாந்து இந்திய மண்ணில் தொடரை வென்ற பின்னர் தோற்றகடிக்க முடியாத அணியாக உள்ளது.

இது ஏன் முக்கிய விஷயம் அல்ல?. விக்கெட் எடுக்கக் கூடிய சுழற்பந்து வீச்சாளரும், சுழற்பந்தை சிறப்பாக எதிர்கொண்ட கெவின் பீட்டர்சன் போன்ற பேட்ஸ்மேனும் தேவை என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து