முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு எதிராக அவதூறு பரப்பினால் நடவடிக்கை: நிதிஷ்குமார் எச்சரிக்கை

சனிக்கிழமை, 23 ஜனவரி 2021      அரசியல்
Image Unavailable

பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதாதளம் பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.  அங்கு சமூக வலைதளங்களில் மந்திரிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும் அவதூறுகள் பரப்பப்படுவதாக புகார் எழுந்துள்ளது. 

இந்த நிலையில் அரசுக்கு எதிராக அவதூறான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல் மந்திரி நிதிஷ்குமார் எச்சரித்து உள்ளார்.  இதற்காக இணையதள விமர்சனங்களை கட்டுப்படுத்தும் சைபர் க்ரைம் பிரிவு உத்தரவில் அவர் கையெழுத்து இட்டுள்ளார். இது தொடர்பாக பீகார் பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி. மாநில காவல்துறைக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: 

பீகார் அரசுக்கு எதிராகவோ, மந்திரிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள், அரசு அதிகாரிகளுக்கு எதிராகவோ சமூக வலை தளங்களில் அவதூறான பதிவுகளை வெளியிட்டால் அவை இணையவழி குற்றமாக கருதப்படும். சம்மந்தப்பட்ட நபர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

இந்த சுற்றறிக்கை அனைத்து மாநில முதன்மை செயலாளர்கள், பல்வேறு துறை செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட் டுள்ளன. 7 ஆண்டுகள்  தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி இணையவழி குற்றங்கள் உறுதி செய்யப்பட்டால் குற்றவாளிகளுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனை விதிக்கப்படும்.  பொதுக்கூட்டங்கள் மற்றும் கட்சிக் கூட்டங்களில் தனது அரசுக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பப்படுவதாக நிதிஷ்குமார் ஏற்கனவே தனது கோபத்தை வெளிப்படுத்தி இருந்தார்.  நிதிஷ்குமாரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி யாதவ் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து