முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லார்ட்சை விட மெல்போர்ன் ‘சதமே’ சிறப்பானது ரஹானே சொல்கிறார்

செவ்வாய்க்கிழமை, 26 ஜனவரி 2021      விளையாட்டு
Image Unavailable

மும்பை.ஜன.26. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் 36 ரன்னில் சுருண்டு மோசமாக தோற்றபிறகு இந்தியா தொடரை கைப்பற்றியது பாராட்டுதலுக்கு உரியதாகும்.

முதல் டெஸ்ட் முடிந்த பிறகு கேப்டன் விராட் கோலி நாடு திரும்பிவிட்டார். இதனால் எஞ்சிய 3 டெஸ்டிலும் ரஹானே கேப்டன் பொறுப்பை வகித்தார்.
அவரது தலைமையில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது. பிரிஸ்பேன் மைதானத்தில் முதல் முறையாக இந்திய அணிக்கு வெற்றி கிடைத்தது.

மெல்போர்னில் நடந்த 2-வது டெஸ்டில் ரகானே சதம் அடித்தார். அவரது இந்த சதத்தால் இந்திய அணி அந்த டெஸ்டில் வெற்றிபெற முடிந்தது.
இந்த நிலையில் இங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் எடுத்த சதத்தைவிட மெல்போர்ன் டெஸ்டில் அடித்த சதமே சிறப்பானது என்று ரஹானே கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

நான் எப்போதெல்லாம் ரன் அடித்து அணி வெற்றி பெற்றாலும் அது எனக்கு மிகவும் சிறப்பான ஒன்று. சொந்த சாதனைகளை விட டெஸ்டில் வெல்வதும், தொடரை கைப்பற்றுவதும் தான் எனக்கு முதன்மையானது.

மெல்போர்ன் டெஸ்ட் சதம் உண்மையில் சிறப்பானது. லார்ட்ஸ் மைதானத்தில் அடித்த சதமே சிறப்பானது என்று நான் மெல்போர்னில் கூறினேன். ஆனால் நிறைய பேர் லார்ட்ஸ் சதத்தைவிட மெல்போர்ன் சதமே சிறப்பானது என்றனர்.

இதற்கு எப்படி பதிலளிக்க வேண்டும் என்று தெரியவில்லை. ஆனால் இப்போது அதை உணர்கிறேன். அடிலெய்டு டெஸ்ட் போட்டிக்கு பிறகான சூழ்நிலையை பார்த்தால், மெல்போர்ன் டெஸ்ட் மிகவும் முக்கியமானது.

இதனால் லார்ட்ஸ் மைதானத்தில் அடித்ததை விட மெல்போர் னில் அடித்த சதமே சிறப் பானது. மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இந்த சதத்தை அடித்தேன். இந்த இன்னிங்ஸ் மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

மெல்போர்ன் சதம்தான் தொடரை வெல்வதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து