முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடியரசு தினம்: வாகா எல்லையில் தேசிய கொடி இறக்கும் நிகழ்வை காண திரண்ட பொதுமக்கள்

செவ்வாய்க்கிழமை, 26 ஜனவரி 2021      இந்தியா
Image Unavailable

நாட்டின் 72-வது குடியரசு தின நிகழ்ச்சியை முன்னிட்டு வாகா எல்லையில் தேசிய கொடியை இறக்கும் நிகழ்வை காண பொதுமக்கள் திரளாக கூடினர்.

இந்தியா-பாகிஸ்தான் நாடுகளின் தேசிய கொடிகள் இறக்கும் நிகழ்ச்சி அந்தந்த நாடுகளின் எல்லை பகுதிகளான அட்டாரி-வாகாவில் தினசரி நடக்கும். அப்போது நடைபெறும் இருநாட்டு வீரர்களின் அணிவகுப்பை காண ஏராளமான மக்கள் கூடுவார்கள். 

நாட்டின் 72-வது குடியரசு தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.  இந்நிலையில் வழக்கம்போல் கொடியிறக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது.  கொடி இறக்கம் என்பது சூரியன் மறைவதற்கு முன்னர் நடத்தப்படும்.  கொடி இறக்கும் நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.  ராணுவ வீரர்கள் வரிசையுடன் நடந்து சென்று அணிவகுத்தனர்.  எல்லை பகுதியில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் தங்களது நாட்டு கொடிகளை இறக்கும் நிகழ்ச்சியை காண பொதுமக்கள் திரளானோர் கூடி கண்டுகளித்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து