முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வினா வங்கி புத்தகம் தயாரிக்கும் பணி தீவிரம்

செவ்வாய்க்கிழமை, 26 ஜனவரி 2021      தமிழகம்
Image Unavailable

குறைக்கப்பட்ட பாடத் திட்டத்தில் இருந்து கேட்கப்படும் கேள்விகளை மாணவர்கள் எளிமையாக படிக்கும் வகையில் அவர்களுக்கு வினா வங்கி தயாரிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

கொரோனா தொற்று காரணமாக 10 மாதங்களுக்குப் பிறகு 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் கடந்த 19-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன.  பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தகுந்த பாதுகாப்புடன் நடத்தப்படுகின்றன. நேரடி வகுப்பு இல்லாத நிலையில் ஆன்லைன் வழியாக படித்து வந்த மாணவர்களுக்கு பாடத் திட்டம் குறைக்கப்பட்டன.  பொதுத்தேர்வில் எளிதில் தேர்ச்சி பெற விரும்புவோர் குறைந்தபட்ச பாடத் திட்டத்தையும் பல்வேறு நுழைவுத் தேர்வுகளை எழுத விரும்புவோர் ஏற்கனவே இருக்கும் பாடத் திட்டப்படி புத்தகங்களில் உள்ள அனைத்து பாடங்களையும் படிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

இந்த நிலையில் குறைக்கப்பட்ட பாடத் திட்டத்தில் இருந்து கேட்கப்படும் கேள்விகளை எளிமையாக படிக்கும் வகையில் அவர்களுக்கு வினா வங்கி தயாரிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அனைத்து பாடங்களுக்கும் வினாவங்கி தயாரிக்கப்படுகிறது. பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப் பாட்டில் உள்ள, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், பெற்றோர் ஆசிரியர் கழகம், தமிழக பாட நூல் நிறுவனம் ஆகியவை இணைந்து இந்த பணிகளில் ஈடுபட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து