சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகளுடன் ராதிகா இன்று முதல் ஆலோசனை

புதன்கிழமை, 27 ஜனவரி 2021      தமிழகம்
Radhika 2021 01 27

Source: provided

சென்னை : சமத்துவ மக்கள் கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இன்று காலை 9.30 மணிக்கு வேலூர் மண்டல கூட்டம் வாணியம்பாடி வி.எஸ்.சரவணா மகாலில் நடக்கிறது. இதில் மண்டல பொறுப்பாளர் ஞானதாஸ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

இன்று சென்னை கிழக்கு மண்டல கூட்டம் விருகம்பாக்கம் கோல்டன் பேரடைசில் நடைபெறுகிறது. இதில் சென்னை கிழக்கு மண்டல அமைப்புச் செய லாளர் டி.மகாலிங்கம் பங்கேற்கிறார்.

நாளை காலை 9.30 மணிக்கு தஞ்சை மண்டல நிர்வாகிகள் கூட்டம் கும்பகோணம் வட்டி பிள்ளையார் கோவில், எஸ்.ஆர். திருமண மகாலில் நடக்கிறது. இதில் தஞ்சை மண்டல அமைப்புச் செயலாளர் குடந்தை என்.ராஜா கலந்து கொள்கிறார்.

மாலை 5.30 மணிக்கு திருச்சி மண்டலத்துக்கு சமயபுரம் அருள் மகாலில் திருச்சி மத்திய மண்டல அமைப்பு செயலாளர் சி.எம். சின்னசாமி தலைமையில் நடைபெறுகிறது.

30-ந்தேதி (சனி) காலை 9.30 மணிக்கு மதுரை மண்டலத்துக்கு திருப்பரங்குன்றம் மரகத மாளிகை திருமண மண்டபத்தில் மாநில துணை பொதுச்செயலாளர் ஜி.ஈஸ்வரன் தலைமையில் ஆலோசனை நடக்கிறது.

மாலை 4.30 மணிக்கு மதுரை தென் பகுதி ஆலோசனை கூட்டம் நாகர் கோவில் விஜயதா மண்டபத்தில் மாநில துணை பொதுச் செயலாளர் என்.சுந்தர் தலைமையில் நடக்கிறது.

31-ந்தேதி (ஞாயிறு) மதியம் 1 மணிக்கு மைக்கேல் இல்லம் செல்கிறார். மாலை 4.30 மணிக்கு சேலம் மாவட்ட நிர்வாகிகள் சேலம் மண்டல அமைப்புச் செயலாளர் மைக்கேல் தங்கராஜ் தலைமையில் சேலம், வாழப்பாடி, வாழப்பாடியார் திருமண மண்டபத்தில் நடக்கிறது.

பிப்ரவரி 1-ந்தேதி காலை 9.30 மணிக்கு கொங்கு வடக்கு மண்டல நிர்வாகிகள் கூட்டம் கொங்கு வடக்கு மண்டல அமைப்புச் செயலாளர் சுரேஷ்காந்தி தலைமையில் அந்தியூர் லட்சுமி திருமண மண்டபத்தில் நடக்கிறது.

மாலை 3.30 மணிக்கு கொங்கு தெற்கு மண்டல நிர்வாகிகள் கூட்டம் மாநில முதன்மை துணை பொதுச் செயலாளர் என். என்.சண் முகசுந்தரம் தலைமையில் கோவை சக்தி திருமண மண்டபத்தில் நடக்கிறது.

2-ந்தேதி (செவ்வாய்க்கிழமை)காலை 10 மணிக்கு விழுப்புரம் மண்டல நிர்வாகிகள் கூட்டம் விழுப்புரம் மண்டல அமைப்பு செயலாளர் செந்தில்முருகன் தலைமையில் பண்ருட்டி கே.எஸ்.ஆர். சக்கரபாணி செட்டியார் திருமண மண்டபத்தில் நடக்கிறது.

மாலை 5.30 மணிக்கு சென்னை மேற்கு மண்டல நிர்வாகிகள் கூட்டம் மாநில துணை பொதுச்செயலாளர் எம்.ஏ.சேவியர் தலைமையில் வியாசர்பாடி எம்.கே.பி. நகர் குருசந்திரா மாளிகையில் நடக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து