டெல்லி பேரணியில் போலீசார் காயம்: அமித்ஷா நேரில் சந்தித்து ஆறுதல்

வியாழக்கிழமை, 28 ஜனவரி 2021      இந்தியா
Amit-Shah--2021 01 28

டெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் காயமடைந்த போலீசாரை மத்திய அமைச்சர் அமித்ஷா மருத்துவமனையில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். 

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். அப்போது கலவரம் மூண்டது. அதன்பின் போலீசார் செய்தியாளர்களிடம் கூறும் போது,  டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில், விவசாயிகள் கடுமையாக தாக்கியதில் 83 போலீசார் காயம் அடைந்து உள்ளனர் என தெரிவித்தனர்.  மேலும் கிழக்கு டெல்லி பகுதியில் வன்முறையில் ஈடுபட்டதற்காக 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.  8 பேருந்துகள் மற்றும் 17 தனியார் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு உள்ளன என போலீசார் தெரிவித்தனர்.  இதுவரை 19 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.  25 குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளன என்றும் போலீசார் தெரிவித்தனர். 

இந்த நிலையில்  டெல்லி பேரணியில் காயமடைந்த போலீசாரில் சிலர் சுஷ்ருதா சிகிச்சை மையத்தில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.  அவர்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் சந்தித்து அவர்களது உடல்நலம் பற்றி விசாரித்தார். இதே போன்று போலீசாரில் சிலர் தீரத் ராம் ஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  அவர்கள் சிகிச்சை பெறும் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா நேரில் சென்று அவர்களை சந்தித்து அவர்களது உடல்நலம் பற்றி கேட்டறிந்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து